சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 7 நாட்களுக்குத் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு திசையில் இது நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே […]
