பெங்களூரு : ‘சிறார்களின் பாதுகாப்புக்காக, பள்ளி பஸ், கேப், வேன் உட்பட, அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர்களை நியமிப்பது கட்டாயம்’ என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
சிறார்களை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டுக்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். இவர்களின் பாதுகாப்பை கருதி, பள்ளி பஸ், வேன், கேப் உட்பட, அனைத்து வாகனங்களிலும் பெண் ஊழியரை நியமிப்பது கட்டாயம். இந்த உத்தரவை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்.
பள்ளி வாகனங்களில், சிறார்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க, ‘பள்ளி வாகன பாதுகாப்பு கமிட்டி’ அமைக்க வேண்டும்.
நன்னடத்தை கொண்ட ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும். ஆட்டோ, பஸ் உட்பட, பள்ளி சிறார்களை அழைத்துச் செல்லும் ஓட்டுனர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில், நன்னடத்தை சான்றிதழ் பெற வேண்டும். இதை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ‘அப்லோட்’ செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளின் அனைத்து வாகனங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். நிர்ணயித்த எண்ணிக்கையை விட, அதிகமான சிறார்களை அழைத்துச் செல்லக் கூடாது.
சிறார்களை வீட்டில் சேர்த்த பின், ஓட்டுனர்கள், உதவியாளர்கள் பள்ளிக்கு திரும்பி புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்களை அந்தந்த பகுதி கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement