திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்களுக்கு, 25 கிராம் எடையிலான லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சம் லட்டுகள் அங்கு அனுப்பி வைக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தளத்தின் வாயிலாக ஆர்ஜித சேவைகள், வாடகை அறைகள் பெறவும், நன்கொடை அளிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement