Ather 450 Apex Electric scooter launched – ஏதெர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மற்றும் சிறப்புகள்

ather 450 apex

ஏதெர் எனர்ஜி நிறுவன 10வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விலை ரூ. லட்சம் ஆக அறிவித்துள்ளது. ஏதெரின் அதி வேகமான மாடலான மின்சார பேட்டரி ஸ்கூட்டரின் வேகம் மணிக்கு 100கிமீ பயணிக்கும் திறனுடன் வந்துள்ளது.

வழக்கமான 450 சீரிஸ் போல அமைந்திருந்தாலும் ஒற்றை இன்டியம் ப்ளூ நிறத்தை பெறுகின்ற ஏதெர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேனல் பகுதியில் உள்ளே இருக்கும் பாகங்கள் மிக தெளிவாக தெரியும் வகையில் கொடுக்கப்பட்டு வித்தியாசமான தோற்ற பொலிவினை கொண்டுள்ளதால் வெகுவாக வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Ather 450 Apex

எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ள ஏதெர் 450 அபெக்ஸ் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 3.7 kWh பேட்டரி ஆனது PMSM மோட்டார் மூலம்  அதிகபட்சமாக 7.0kW (9.38hp) பவர் மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.9 வினாடி போதுமானதுகும்.

ஸ்மார்ட் ஈக்கோ மோடில் நிகழ் நேரத்தில் ரேஞ்ச் 110 கிமீ வரை வெளிப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 450 அபெக்ஸ் 157 கிமீ ரேஞ்ச் வழங்கும் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள Wrap+ மோடில் பயணித்தால் ரேஞ்ச் 75 கிமீ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.

ஸ்மார்ட் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப்+ ஆகிய ரைடிங் முறைகளை கொண்டு 0 முதல் 100 சதவிகித சார்ஜிங் ஏறுவதற்கு 5 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகுவதுடன், 0-80 % சார்ஜ் ஏறுவதற்கு 4 மணி நேரம் 30 நிமிடங்கள் போதுமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக ஏதெர் கிரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 0-50 % வரை ஏறுவதற்கு 1 நிமிடத்தில் 1.5 கிமீ பயணிக்கும் வகையிலான சார்ஜ் மற்றும் 50-80 % பெற 1 நிமிடத்தில் 1 கிமீ என்ற ஆதரவினை ஏதெர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

கூடுதலாக ஏதெர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7 அங்குல TFT தொடு திரை கிளஸ்ட்டர் பெற்று ஏதெர் புரோ பேக்கில் உள்ள ஏதெர் கனெக்ட் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஏதெர் ஆப் வசதிகள், மேஜிக் ட்விஸ்ட், ரைட் ஸ்டேட்ஸ், ஃபைன்ட் மை ஸ்கூட்டர் உட்பட எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், கோஸ்டிங் ரீஜென், வாகனம் விழுந்தால் ஆஃப் ஆகும் வசதி, ஆட்டோ ஹோல்ட்  போன்ற வசதியை பெறுகின்றது.

மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டு 200 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டயர் 90/90 -12 அங்குல அலாய் வீல் உடன் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் 190 மிமீ டிஸ்க் கொண்டு டயருடன் 100/80-12 அலாய் வீல் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஏதெர் நிறுவனம் புதிய 450 அபெக்ஸ் மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் முன்பே குறிப்பிட்டப்படி டெலிவரி மார்ச் 2024 முதல் துவங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.