அரணம் (தமிழ்)

பிரியன் இயக்கத்தில் கீர்த்தனா, வர்ஷா, பிரியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரணம்’. கிராமத்தில் நடக்கும் ஹாரர், திரில்லர் திரைப்படமான இது ஜனவரி 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கும்பாரி (தமிழ்)

கெவின் ஜோசப் இயக்கத்தில் ஜான் விஜய், மகானா சஞ்சீவி, சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கும்பாரி’. நண்பர்களின் நட்பு, காதல் அதை மையப்படுத்திய கதையான இது, ஜனவரி 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Double Engine (தெலுங்கு)

ரோஹித் பெனுமட்சா இயக்கத்தில் முனி மியாதாரி, அஜித் மோகன், ரோஹித் நர்சிம்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Double Engine’. ஹைதராபாத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் கதாநாயகன் நண்பர்களுடன் தன் பிறந்த நாளைக் கொண்டாட தன் கிராமத்திற்குச் செல்கிறான். அங்கு என்ன நடந்தது, அது அவர் வாழ்க்கையை எப்படி மாற்றியது, ‘Double Engine’ என்றால் என்ன என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ஜனவரி 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Aattam (மலையாளம்)

ஆனந்த் ஏகர்ஷி இயக்கத்தில் வினய் கோட்டை, ஜரின் ஷிஹாப், கலாபவன் ஷாஜோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Aattam’. நாடகக் குழுக்களிடையே நடக்கும் சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படமான இது, ஜனவரி 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Dream Scenario (ஆங்கிலம்)

கிறிஸ்டோபர் போர்க்லி இயக்கத்தில் நிக்கோலஸ் கேஜ், ஜூலியான் நிக்கல்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dream Scenario’. காமெடி, ஃபேண்டஸி, ஹாரர் திரைப்படமான இது ஜனவரி 5ம் தேதி வெளியாகியுள்ளது.
Foe (ஆங்கிலம்) – Amazon Prime Video

கார்த் டேவிஸ் இயக்கத்தில் சாயர்ஸ் ரோனன், பால் மெஸ்கல், ஆரோன் பியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Foe’. சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Good Grief (ஆங்கிலம்) – Netflix

டேன் லெவி இயக்கத்தில் டேன் லெவி, ரூத் நெக்கா, ஹிமேஷ் படேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Good Grief’. காமெடி, காதல் கலந்த ஜாலியான திரைப்படமான இது, ஜனவரி 5ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வார வெப்சீரிஸ்கள்
Fool Me Once (ஆங்கிலம்) – Netflix

டேவிட் மூர் மற்றும் நிமர் ரஷெட் ஆகியோர் இயக்கத்தில் மிச்செல் கீகன், அடீல் அக்தர், ஜோனா லும்லே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Fool Me Once’. ஹாரர், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Brothers Sun (ஆங்கிலம்) – Netflix

பிராட் ஃபால்சுக், ஆமி வாங், பைரன் வூ ஆகியோர் இயக்கத்தில் மைக்கேல் யோ, ஜஸ்டின் சியென், சாம் சாங் லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Brothers Sun’. ஆக்ஷன், காமெடி படைப்பான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Perilloor Premier League (மலையாளம்) – Disney + Hotstar

நிகிலா விமல், அஜு வர்கீஸ், சன்னி வெய்ன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாள மொழி வெப்சீரிஸ் ‘Perilloor Premier League’. சொந்த கிராமத்திற்கு தன் காதலனுடன் செல்லும் கதாநாயகிக்கு எதிர்பாராத விதமாக பஞ்சாயத்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பதுதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
கான்ஜுரிங் கண்ணப்பன் (தமிழ்) – Netflix

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’. காமெடி, ஹாரர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Hi Nanna (தெலுங்கு) – Netflix

ஷூர்யுவ் இயக்கத்தில் நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கன்னா, நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Hi Nanna’. அப்பா சென்ட்டிமன்ட் கதையான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Kota bommali PS (தெலுங்கு) – Netflix

தேஜா மார்னி இயக்கத்தில் மேகா ஸ்ரீகாந்த், வரலட்சுமி சரத்குமார், ராகுல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kota bommali PS’. அரசியல்வாதிகளால் க்ரைம் வழக்கு ஒன்றில் மாட்டி, அதிலிருந்து வெளிவரப் போராடும் காவல் அதிகாரியை மையமாகக் கொண்டது இதன் கதை. இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Tejas (இந்தி) – Zee5

சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத், அன்ஷுல் சவுகான், வீணா நாயர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Tejas’. ராணுவத்தில் போர் விமானியாக இருக்கும் பெண்ணின் அசாத்திய அட்வன்சர் திரில்லர் கதையான இது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Calling Sahasra (தெலுங்கு) – Amazon Prime Video

அருண்விக்கிராலா இயக்கத்தில் சிவா பாலாஜி, ஸ்பந்தனா பாலி, டோலி ஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Calling Sahasra’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Tholvi F.C. (மலையாளம்) – Amazon Prime Video

ஜார்ஜ் கோரா இயக்கத்தில் ஷராபுதீன், ஜானி ஆண்டனி, ஜார்ஜ் கோரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Tholvi F.C.’. காமெடி நிறைந்த குடும்பக் கதையான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Talk to Me (ஆங்கிலம்) – Amazon Prime Video

டேனி பிலிப்போ, மைக்கேல் பிலிப்போ ஆகியோர் இயக்கத்தில் அரி மெக்கார்த்தி, ஹமிஷ் பிலிப்ஸ், கிட் எர்ஹார்ட்-புரூஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Talk to Me’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Expend4bles (ஆங்கிலம்) – Lionsgate Play

ஸ்காட் வா இயக்கத்தில் ஜேசன் ஸ்டாதம், 50 சென்ட், மேகன் ஃபாக்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Expend4bles’. Expendables படங்களின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ஆக்ஷன் அட்வன்சர் நிறைந்த இத்திரைப்படம் ‘Lionsgate Play’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Society of the Snow (ஸ்பேனிஷ்) – Netflix

ஜே.ஏ. பயோனா இயக்கத்தில் என்ஸோ வோக்ரின்சிக், அகஸ்டின் பர்டெல்லா, மடியாஸ் ரீகால்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Society of the Snow’. விமான விபத்தில் பனிப் பிரதேசத்தில் மாட்டிக்கொள்ளும் பயணிகள், அந்தக் கடும் பனி சூழலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.