Elevate SUV Price hiked – ரூ.58,000 வரை ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விலை உயர்ந்தது

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மிகுந்த வரவேற்பினை பெற்ற எலிவேட் மாடலுக்கான விலையை ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.58,000 வரை உய்த்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்பொழுது ஹோண்டா விற்பனை செய்து வருகின்ற மாடல்களின் மொத்த விற்பனையில் 50 % பங்களிப்பை எலிவேட் பெற்றுள்ளது.

மிக கடும் போட்டியாளர்கள் நிறைந்த பிரிவில் வெளியான எலிவேட்டிற்கு சவால் விடுக்கும் கிரெட்டா, செல்டோஸ், ஹாரியர், கிராண்ட் விட்டாரா, ஹைரைடர் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட மாடல்களுடன் சந்தையை எதிர்க்கொள்ளுகின்றது.

Honda Elevate Price hiked

2024 முதல் நாள் துவங்கியே பல்வேறு கார் மற்றும் பைக் நிறுவனங்கள் விலை உயர்த்தி வருகின்ற நிலையில் எலிவேட் எஸ்யூவி மாடல் வெளியிடப்பட்ட SV MT ரூ.11 லட்சம் ஆரம்ப விலை ரூ.58,000 வரை உயர்த்தப்பட்டு ரூ.11.58 லட்சம் ஆக துவங்கி டாப் ZX வேரியண்ட் ரூ.16.20 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துவக்க நிலை எலிவேட் மட்டுமே ரூ.58,000 மற்ற வேரியண்டுகள் அனைத்தும் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, பியரல் வெள்ளை மற்றும் இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற வேரியண்டுகளின் விலை ரூ.8,000 முதல் ரூ.28,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் அமைந்திருக்கின்றது.

Variant Old Price (ex-showroom) New Price (ex-showroom) Difference
Honda Elevate SV MT ₹ 11.00 லட்சம் ₹ 11.58 லட்சம் ₹ 58,000
Honda Elevate V MT ₹ 12.11 லட்சம் ₹ 12.31 லட்சம் ₹ 20,000
Honda Elevate V CVT ₹ 13.21 லட்சம் ₹ 13.41 லட்சம் ₹ 20,000
Honda Elevate VX MT ₹ 13.50 லட்சம் ₹ 13.70 லட்சம் ₹  20,000
Honda Elevate VX CVT ₹ 14.60 லட்சம் ₹ 14.80 லட்சம் ₹  20,000
Honda Elevate ZX MT ₹ 14.90 லட்சம் ₹ 15.10 லட்சம் ₹ 20,000
Honda Elevate ZX CVT ₹ 16.00 லட்சம் ₹ 16.20 லட்சம் ₹ 20,000

எனவே, புதிய விலையின் அடிப்படையில் ஹோண்டா எலிவேட் காரின் தமிழ்நாடு ஆன் ரோடு விலை ரூ. 14.60 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரை அமைந்திருக்கின்றது.

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடலில் 1.5-லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 4300 rpm-ல் 121hp பவர், 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான பவர்டிரையின் கிடைக்கின்றது.

நமது ஆட்டோமொபைல் தமிழன் இணையதளத்தை கூகுள் நியூஸ் மூலம் பின் தொடருங்கள்

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.