Ather 450S escooter Price dropped – ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.20,000 குறைந்தது

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டு, தற்பொழுது விலை ரூ.1.10 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மாடலில்  2.9Kwh லித்தியம் ஐயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏதெர் நிறுவனம் 10வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 450 ஏபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.89 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Ather 450S Escooter

குறைந்த விலையில் கிடைக்கின்ற ஏதெர் 450S ஸ்கூட்டர் மாடலில் 2.9 Kwh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு PMSM மோட்டார்  5.4 Kw பவர் மற்றும் 22 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் ஈக்கோ மோடில் அதிகபட்சமாக 111 கிமீ ரேஞ்சு (IDC) வழங்குகின்றது. ஆனால் டாப் ஸ்பீடு மணிக்கு 90Km/hr ஆக உள்ளது.

இந்த மாடல் நிகழ்நேரத்தில் ஸ்மார்ட் ஈக்கோ மோடில் அதிகபட்சமாக 75-90 கிமீ ரேஞ்ச் வரை கிடைக்கின்றது.

450S மாடலில் கூடுதல் புரோ பேக் பெறும் பொழுது நான்கு ரைடிங் மோடுகள் SmartEco, Eco, Ride மற்றும் Sport ஆகியவற்றை பெற்றுள்ளது. 0-80 % சார்ஜ் ஏறுவதற்கு 6 மணி நேரம் 36 நிமிடம் தேவைப்படும்.

450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பருடன் இரண்டு பக்கமும் 90/90-12 டயருடன் முன்பக்கம் 200மிமீ டிஸ்க் மற்றும் 190 மிமீ டிஸ்க் பின்புறத்தில் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ளது.

450s cluster

ஏதெர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலாக புரோ பேக் கொண்டுள்ளது. இந்த புரோ பேக் ரைடிங் அசிஸ்ட், நேவிகேஷன், ரைடிங் ஸ்டேட்ஸ், ஃபைன்டு மை ஸ்கூட்டர், டோ அலர்ட், அவசகரகால எச்சரிக்கை, OTA மேம்பாடு, ஆட்டோஹோல்ட், அவசர கால பிரேக்கிங் விளக்கு, வாகனம் கீழே விழுந்தால் உடனடியாக மோட்டார் ஆஃப் ஆகும் வசதி ஆகியவற்றை வழங்குகின்றது.

முன்பாக ரூ.1.30 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு நிலையில் ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.10 லட்சம் ஆகும். கூடுதலாக புரோ பேக் விலை ரூ.15,000 ஆக அறிவிக்கபட்டுள்ளது.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.