“காங்கிரசார் மூன்று துணை முதல்வர் பதவிகளை உருவாக்க முட்டி மோதுவதற்கு பதிலாக, 224 தொகுதிகளுக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகளை உருவாக்கட்டும்,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கிண்டல் செய்தார்.
இது குறித்து , டில்லியில் நேற்று அவர் கூறியதாவது:
காங்கிரஸ் அரசு லோக்சபா தேர்தலுக்கு முன்போ அல்லது பின்னரோ கவிழும். காங்கிரசார் மூன்று துணை முதல்வர் பதவிகளை உருவாக்க முட்டி மோதுவதற்கு பதிலாக, 224 தொகுதிகளுக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகளை உருவாக்கட்டும்.
அன்னபாக்யா அரிசியை, மந்திராட்சதையாக மக்களுக்கு வழங்குவதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். இதற்காக அவர் மாநில மக்களிடம், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மாநில அரசியல் சூழ்நிலை குறித்து, கட்சி மேலிடத்திடம் ஆலோசனை நடத்துவேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, இன்று சந்திப்பேன்.
ஹாவேரி லோக்சபா தொகுதியில், என் மகன் காந்தேஷ் போட்டியிட ஆர்வம் காண்பிப்பது உண்மைதான்.
அவருக்கு சீட் கிடைக்காது என, உங்களிடம் யார் கூறியது? தேவையின்றி நீங்களே செய்திகளை உருவாக்காதீர்கள். என் மகனுக்காக லாபி நடத்த, நான் டில்லிக்கு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement