சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எக்ஸ்6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போக்கோ எக்ஸ்6 போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனுடன் எக்ஸ்6 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் pOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 2 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 64 + 8 + 2 மெகாபிக்சல் கொண்டுள்ள மூன்று கேமரா பின்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ள முன்பக்க கேமரா
- 5,100mAh பேட்டரி
- 67 வாட்ஸ் டர்போ சார்ஜ் அம்சம்
- மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் +256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இந்த போனின் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது. இந்த போனுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது
The world’s a jungle with beasts all around. We’re on top of the food chain and they’re all about to go down.#TheUltimatePredator is unleashed on 11th Jan, 5:30pm as #POCOXPro and #POCOX6 on @Flipkart.
Tune into the livestream here: https://t.co/jTorPnqGSZ pic.twitter.com/XdfM4NvP0C
— POCO India (@IndiaPOCO) January 9, 2024