வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: கோவிட் பாதிப்பால் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார மைய தகவல் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கூறியிருப்பதாவது:
கோவிட் ஜே.என்-1 பாதிப்பு மிக கவலை அளிக்கிறது. கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்டவை அவசியம் என வலியுறுத்தினோம். விடுமுறை காலம் மற்றும் மக்கள் அதிகம் கூடுதல், பருவ சூழல் மாறுபாடு இந்த பாதிப்புக்கு காரணமாக அறியப்படுகிறது.
இருப்பினும் கோவிட் கடந்த ஒரு மாதத்தில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 50 நாடுகளில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது . தடுக்கக்கூடிய இழப்பை மீறி உயிர்ப்பலி கொடுத்திருக்கிறோம். குளிர் காலம் என்பதால் கோவிட் வேகமாக பரவி இருக்கிறது. இந்த தாக்கம் ஜனவரி மாத இறுதி வரை இருக்கலாம் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement