5 வருட வாழ்க்கையை நஜீப்புக்காக அர்ப்பணித்தேன்: பிருத்விராஜ்

இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மலையாள படம் 'ஆடுஜீவிதம்'. இந்த படத்தின் தலைப்பு மற்ற மொழிகளுக்கு ஏற்ப 'தி கோட் லைப்'. என்று வைக்கப்பட்டுள்ளது. நிறைய கனவுகளுடன் அரபிய நாட்டுக்கு வேலைக்கு சென்ற ஒரு இளைஞன் அங்கு கொடும் பாலைவனத்தில் ஆடு மேய்த்து வாழ்ந்த கதைதான் படம்.

ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார், கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிருத்விராஜ் கூறும்போது “தி கோட் லைப் படம் உருவாக்குவதில் நிறைய சவால்கள் இருக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். இருந்தாலும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என் எல்லைகளைத் உடைத்து இதில் நடித்துள்ளேன். என் வாழ்நாளில் 5 வருடங்களை இந்தப் படத்தின் நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். உடல்ரீதியாக பல மாற்றங்களை சந்திக்க வேண்டி இருந்ததாலும் இந்தக் கதாபாத்திரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் முழுமையாக்குவது மட்டுமே என் இலக்காக இருந்தது.

'பாகுபலி', 'கேஜிஎப்' போன்ற படங்களுக்கு இணையாக இந்த படம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப மிக பிரம்மாண்டமான காட்சி அமைப்பை இருக்க வேண்டும் என்பதற்காகவே சிரமப்பட்டு வெவ்வேறு சவாலான லொகேஷனை தேர்ந்தெடுத்து படமாக்கினோம். வெளிச்சத்துக்கு வராத சரித்திர நாயகர்களின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்பதில் உறுதி. நாங்கள் இந்தப் படத்தை உருவாக்கி ரசித்த அளவுக்கு பார்வையாளர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.