வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தமிழகத்திற்கு வெள்ள நிவாரணத்தை வழங்கக் கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‛‛ புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தமிழகத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கவும், அதில் ரூ.3 ஆயிரம் கோடியை இடைக்கால நிவாரணம் ஆக உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக்கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், ‛‛தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை விசாரிக்க முடியாது. இந்த பிரச்னையில் தலையிட முடியாது. தமிழக அரசுக்கு பிரச்னை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள். இது நிர்வாகம் சம்பந்தப்பட்டது. அதை அரசு பார்த்துக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” எனக்கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement