தொடங்கியது அமேசான் திருவிழா… தள்ளுபடியில் கிடைக்கும் 'தெறி' ஸ்மார்ட்போன்கள்!

Amazon Great Republic Day Sale 2024: அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை அமேசான் பிரைம் பயனர்களுக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது. பிரைம் சந்தா உள்ளவர்கள் தற்போது தள்ளுபடி விற்பனையை அணுகலாம். ஜனவரி 14ஆம் தேதி அதாவது நாளை மதியம் 12 மணிக்கு தொடங்கி அனைத்து பயனர்களும் விற்பனையை அணுக முடியும். 

தமிழ்நாட்டில் தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், நீங்கள் புதிய ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் அல்லது பிற மின்னணு பொருட்களை வாங்க விரும்பினால், இந்த விற்பனை உங்களுக்கு பயனளிக்கும். வாங்குவதற்கு முன் இறுதி விலையை மேலும் குறைக்க, வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் ஆகிய ஆப்பர்களை நீங்கள் பெறலாம். 

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை தற்போது நடைபெற்று வரும் நிலையில், பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதில் சில சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடியை (Best Smartphone Deal In Amazon) இதில் காணலாம். 

OnePlus 11R 5G

இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8+ Gen 1 பிராஸஸர், 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன் 120 Hz சூப்பர் ஃப்ளூயட் AMOLED, 50MP பிரதான கேமரா, 16MP முன்பக்க செல்ஃபி கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது OnePlus 11R 5G 38 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Motorola Razr 40 Ultra

இந்த ஸ்மார்ட்போனில் 6.9-இன்ச் FHD+ pOLED வெளிப்புற டிஸ்ப்ளே, 3.6-இன்ச் pOLED டிஸ்ப்ளே, 12MP பிரதான கேமரா மற்றும் 13MP செல்ஃபீ கேமரா உள்ளது. டால்பி அட்மாஸ் மற்றும் ஸ்பேஷியல் சவுண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் சவுண்ட் கொண்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன. Motorola Razr 40 Ultra மொபைல் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது 69 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Samsung Galaxy S23 5G

இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 2 பிராஸஸருடன் இணைந்து 50MP வைட் ஆங்கிள் கேமராவுடன் வருகிறது. இது கேமிங்கிற்கு ஏற்ற மொபைல்களாகும். Samsung Galaxy S23 5G அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது 54 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Honor 90 5G

இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 7 Gen 1 Accelerated Edition 5G 4nm பிராஸஸர் உள்ளது. பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலில் 200MP பிரதான மற்றும் 50MP செல்ஃபி கேமரா உள்ளது. அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது Honor 90 5G, 19 ஆயிரத்து 999 ரூபாயக்கு கிடைக்கிறது.

Apple iPhone 13

இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, 12MP அகலம் மற்றும் அல்ட்ரா-வைட் கேமராக்கள் கொண்ட மேம்பட்ட இரட்டை கேமரா அமைப்பு, 4K டால்பி விஷன் ஹெச்டிஆர் ரெக்கார்டிங் மற்றும் நைட் மோட் கொண்ட 12MP ட்ரூடெப்த் முன் கேமராவுடன் வருகிறது. இது A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் 13 மொபைல் 48 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.