பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதா…? பதற்றமே வேண்டாம் – ஆன்லைனில் பெற ஈஸியான வழி இதோ!

How To Get Lost Birth Certificate In Tamil: பிறப்புச் சான்றிதழில் ஒரு நபரின் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த சான்றிதழ் அந்த தகவலை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்புச் சான்றிதழ் என்ற முக்கியமான ஆவணம் ஒரு நபரின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான சான்றாகும்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969இன் கீழ் பிறப்புச் சான்றிதழ் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் 21 நாட்களுக்குள் உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும். பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், அதன் நகலை ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

விண்ணப்பிப்தற்கான நடைமுறை

– நீங்கள் உங்கள் உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியின் இணையதளத்திற்குச் சென்று பிறப்புச் சான்றிதழின் நகலுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

– விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை இணைக்கவும்.

– விண்ணப்பப் படிவத்தை உங்கள் உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

– விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

– விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் செலுத்தலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.