டில்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆளும் பாஜகவை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதுவரை ‘இந்தியா’ கூட்டணி மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தி உள்ளது. கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து கூட்டங்களில் பேசப்பட்டாலூ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது […]
