பிலிபித்:உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் புறநகரில் நடமாடும் புலி குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூப்பூர் கிருபா கிராமம் அருகே, பிசல்பூர் சாலையில் புலி நடந்து செல்வதை ஒருவர், மொபைலில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது, பரவியது.
வனத்துறை அதிகாரி அஞ்சனி கூறியதாவது:
பிலிபிட் புறநகரில் புலி நடமாட்டம் உள்ள பகுதி களில் கூண்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வனத்துறையுடன், போலீஸ் படையும் களம் இறங்கியுள்ளது. புலியைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement