அயலான் (தமிழ்)

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில் ‘இன்று, நேற்று, நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் – பேன்டஸி திரைப்படமான இது ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கேப்டன் மில்லர் (தமிழ்)

தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடித்திருக்கிறார். வெகுளிப் பையனாக இருந்து வெகுண்டு எழும் போராளியாக மாறும் தனுஷின் ஆக்ஷன், அதிரடி திரைப்படமான இது ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மெரி கிறிஸ்துமஸ் (இந்தி/தமிழ்):

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘மெரி கிறிஸ்துமஸ்’. பாலிவுட் இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஒரே சமயத்தில் இந்தியிலும் தமிழிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கிறார் நடிகை கத்ரினா கைஃப். இப்படமும் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மிஷன் – Chapter 1 (தமிழ்)

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது மிஷன். இது ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Guntur Kaaram (தெலுங்கு)

நடிகர் மகேஷ் பாபு, ஶ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குண்டூர் காரம்’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Saindhav (தெலுங்கு)

நடிகர் வெங்கடேஷ், ஆர்யா, நவாஸுதின் சித்திக், ஷ்ரதா ஶ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைந்தவ்’. தெலுங்குத் திரைப்படமான இது ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Naa Saami Ranga (தெலுங்கு)

‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ என்கிற மலையாளத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியிருக்கிறது ‘நா சாமி ரங்கா’. நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியிருக்கிற இப்படத்தை விஜய் பின்னி இயக்கியிருக்கிறார். கீரவாணி இசையமைத்துள்ள இப்படம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Hanu Man (தெலுங்கு)

‘ஓ பேபி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஹனு மேன்’. அமிர்தா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். ‘ஜோம்பி ரெட்டி’ புகழ் பிரசாந்த் வர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு திரைப்படமான இது ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Abraham Ozler (மலையாளம்)

மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியிருக்கும் ‘அப்ரஹாம் ஒஸ்லெர்’ திரைப்படத்தில் ஜெயராம், அர்ஜுன் அசோகன், அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி ரிலிஸ்கள்
செவப்பி (தமிழ்) – Aha

எம்.எஸ்.ராஜா இயக்கத்தில் செபாஸ்டின் ஆண்டனி, ஷ்ரவன் அத்வேதன், மிம்மோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செவப்பி’. செவப்பு கோழியின் மீது அதீத அன்பு கொண்ட சிறுவனும் அதைச் சுற்றி நடக்கும் உணர்ச்சிகரமான கதையும்தான் இதன் மையக்கரு. இத்திரைப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Lift (ஆங்கிலம்) – Netflix

எஃப். கேரி கிரே இயக்கத்தில் கெவின் ஹார்ட், குகு ம்பாதா-ரா, சாம் வொர்திங்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Lift’. ஆங்கில திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Role Play (ஆங்கிலம்) – Amazon Prime Video

தாமஸ் வின்சென்ட் இயக்கத்தில் கேலி குக்கூ, டேவிட் ஓயெலோவோ, பில் நிகி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Role Play’. ஆக்ஷன், திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வார வெப்சீர்ஸ்
Journey (தமிழ்) – SonyLiv

சேரன் இயக்கத்தில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Journey’. இந்த வெப்சீர்ஸ் ‘SonyLiv’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
Killer Soup (இந்தி) – Netflix

அபிஷேக் சௌபே, உனைசா மெர்சன்ட், ர்ஷத் நலவாடே ஆகியோர் இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், கொங்கனா சென் சர்மா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ். ‘Killer Soup’. ஆக்ஷன், திரில் கலந்த காமெடி வெப்சீரிஸான இது ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.
Echo (ஆங்கிலம்) – Disney+ Hotstar

அலக்வா காக்ஸ், சாஸ்கே ஸ்பென்சர், டெவரி ஜேக்கப்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Echo’. மார்வெல் ஃபேஸ் 5-ல் உருவாகியிருக்கும் இந்தப் படைப்பு ஏற்கெனவே வெளியான ‘ஹாக்-ஐ’ தொடரின் ஸ்பின் ஆஃப். ஆக்ஷன், அட்வன்சர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ தளத்தில் வெளியாகியுள்ளது.
Boy Swallows Universe (ஆங்கிலம்) – Netflix

லீ டைகர் ஹாலி, கிறிஸ்டோபர் ஜேம்ஸ் பேக்கர், ஃபோப் டோன்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Boy Swallows Universe’. இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
Criminal Record (ஆங்கிலம்) – Apple Tv+

பால் ரூட்மேன் இயக்கத்தில் பீட்டர் கபால்டி, குஷ் ஜம்போ, ஆயிஷா கலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Criminal Record’. ஆக்ஷன், திரில்லர் திரைப்படமான இது ‘Apple Tv+’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
Tiger – 3 (இந்தி) Amazon Prime Video

மனீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் ‘Tiger 3’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.
Guthlee Ladoo (இந்தி) – Amazon Prime Video

இஷ்ரத் ஆர் கான் இயக்கத்தில், சஞ்சய் மிஸ்ரா , சுப்ரத் தத்தா , கல்யாணி முலே மற்றும் தனய் சேத் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘Guthlee Ladoo’. இப்படம் ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.
Mission Impossible Dead Reckoning – Part One (ஆங்கிலம்) – Amazon Prime Video

கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் ஸ்டன்ட்டுகளுக்குப் பெயர்போன ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் அட்வன்சர், ஆக்ஷன், திரில்லராக வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘Mission Impossible Dead Reckoning – Part One’. இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.
Extra Ordinary Man (தெலுங்கு) – Netflix

வக்கந்தம் வம்சி இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா, ராஜசேகர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Extra Ordinary Man’. காதல், காமெடி திரைப்படமான இப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
Dumb Money (ஆங்கிலம் ) – Netflix

கிரேக் கில்லெஸ்பி இயக்கத்தில் பால் டானோ, பீட் டேவிட்சன், வின்சென்ட் டி’ஓனோஃப்ரியோ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘Dumb Money’. ‘GameStop’ என்ற மிஷன் மூலம் நாட்டில் இருக்கும் பல பணக்காரர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஹேக்கர் பற்றிய கதைதான் இதன் கதைக்களம். இந்தப் படம் ஜனவரி 13-ம் தேதி ‘Netflix’ தளத்தில் வெளியாகிவுள்ளது.
Kodamomalli PS (தெலுங்கு) Aha

தேஜா மார்னி இயக்கத்தில், ஸ்ரீகாந்த் , வரலக்ஷ்மி சரத்குமார், ராகுல் விஜய் மற்றும் ஷிவானி ராஜசேகர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘Kodamomalli PS’. இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான ‘நயட்டு’ படத்தின் ரீமேக்காகும். இந்தப் படம் தற்போது ‘aha’ தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் பொங்கல் விடுமுறையில் உங்களின் சாய்ஸ் என்ன?