சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, 3,184 போலீஸாருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்பதங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றி வரும் 3,184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள், தங்களது பணிகளில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து […]
