விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க மத்திய அரசுக்கு 8 வார கால அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, வாகனத்தால் ஒருவரை மோதிவிட்டு தப்பியோடிய நிலையில் விபத்துக்குள்ளானவர் பலியானால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும். […]
