
சிரஞ்சீவி 156வது பட தலைப்பு அறிவிப்பு
மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவித்தனர். சில மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு 'விஷ்வாம்பர' என தலைப்பு வைத்துள்ளதாக இன்று சங்கராந்தி திருநாள் முன்னிட்டு சிறப்பு வீடியோ உடன் படக்குழு அறிவித்துள்ளனர்.