சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், தீய சக்திகளைத் தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதிமுக நிறுவனத் தலைவா், முன்னாள் முதல்வா் மற்றும் நடிகர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாள் விழாவை அதிமுக தொண்டா்கள், நிா்வாகிகள் எம்.ஜி.ஆரின் சிலை, உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் […]
