மொபைல் சார்ஜர் ஏன் கலர் கலராக வருவதில்லை… இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?

Reason For Charger Black White Color: ஒவ்வொருவரின் வீட்டிலும் இப்போது மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற சாதனத்தின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது எனலாம். சுமார் ஒரு குடும்பத்தில் மட்டும் அம்மா, அப்பா, மகன்/மகள் என குறைந்தது இரண்டு மொபைல்கள், ஒரு லேப்டாப் பயன்படுத்தப்படுகிறது. இதில் எப்போதும் வீட்டின் ஏதாவது ஒரு பிளக்போர்டில் சார்ஜர்கள் தொங்கியபடியே இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும்.

சார்ஜ் முக்கியம் பிகிலு…

பேச்சிலர்களின் அறையில் ஒரே ஜங்ஷன் பாகஸில் ஐந்து வெவ்வேறு சார்ஜர்கள் மூலம் ஐந்து மொபைல்கள் ஒரே நேரத்தில் சார்ஜ் ஏறும் காட்சியும் இங்கு பல பேர் பாத்திருப்பீர்கள். தங்களின் சாதனங்களுக்கு சார்ஜ் செய்வதை பலரும் சிரத்தையோடு செய்வார்கள், சிலர் மறந்துவிட்டு கடைசி 1% வரும் வரை ஏன் சாதனை அணைந்த பின்னர்தான் சார்ஜ் செய்வார்கள். இது ஒவ்வொரு பயனருக்கு பயனர் மாறுப்படும். 

ஆனால், அவர்கள் சார்ஜ் செய்யும் சார்ஜர்கள் மட்டும் வெள்ளை/கருப்பு நிறத்தை விட்டு வேறு நிறத்திற்கு மாறபடவே செய்யாது. ஆம், உங்களின் அனைத்து சார்ஜர்களும் வெள்ளை/கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். அதற்கென சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவை குறித்து இதில் காணலாம். 

சிலர் யோசிக்கலாம், இப்போதெல்லாம் ஒருவர் OnePlus மொபைல் வாங்குகிறார் என்றால், அவரின்  சார்ஜர் சிவப்பு நிறத்தில்தானே இருக்கிறது என. ஆனால், நன்றாக யோசித்து பார்த்தால் சார்ஜரின் கேபிள்தான் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் சார்ஜர் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். 

கருப்பு நிறம் ஏன்?

இப்போதுதான் வெள்ளை நிறம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முன்பில் இருந்து பல நிறுவனங்கள் கருப்பு நிறத்தில்தான் சார்ஜரை கொடுத்து வந்தன. மற்ற நிறங்களை விட கருப்பு நிறம் வெப்பத்தை நன்றாக உறிஞ்சும். சார்ஜ் செய்யும் போது சார்ஜர் சூடாகிறது. கருப்பு நிற சார்ஜர் வெப்பம் வெளியேற உதவும். இதனால் சார்ஜர் சேதப்படாது. எனவேதான், கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டது. தற்போது ஆப்பிள் மேக்புக் லேப்டாப் உள்ளிட்ட சிலவற்றை தவிர்த்து பல லேப்டாப்களின் சார்ஜர் கருப்பு நிறத்தில்தான் வருகிறது.

என்ட்ரி கொடுத்த வெள்ளை நிறம்

இருப்பினும், கொஞ்ச காலத்திலேயே மொபைல், டேப்லட் சார்ஜர்கள் வெள்ளை நிறத்தில் வர தொடங்கின. தயாரிப்பு நிறுவனங்கள் தங்கின் தயாரிப்புகளுக்கு வெள்ளை நிற சார்ஜர்களையும் வழங்கத் தொடங்கின. வெள்ளை நிற சார்ஜர்கள் சீக்கிரம் சூடாவதில்லை. மேலும், அவற்றின் ஆயுட்காலமும் அதிகரிக்கிறது என்பதும் முக்கிய காரணம்.

கருப்பு நிற சார்ஜரிலும் சிக்கல்கள் இருந்தன. சார்ஜர் இருட்டில் இருக்கும்போது அதை பார்ப்பது கடினமாகும். இது சார்ஜருக்கு சேதப்படுத்த உண்டாகும் வாய்ப்பை வழங்கும். வெள்ளை நிற சார்ஜர்கள் இருட்டில் அதிகம் தெரியும். இது சார்ஜருக்கு சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும், வெள்ளை நிறம் மற்ற நிறங்களை விட பார்ப்பது ஃபேஷனாகவும் கருதப்படுகிறது. எனவே, இப்போது பல நிறுவனங்கள் தங்கள் சார்ஜர்களை வெள்ளை நிறத்தில் வழங்குகின்றன.

ஆப்பிளின் தனித்துவம்

ஆப்பிள் எப்போதும் அதன் அனைத்து சாதனங்களுக்கும் வெள்ளை நிற சார்ஜர்களை மட்டும் வழங்கி வருகின்றன. இதற்குக் காரணம், வெள்ளை நிறமானது மிகவும் உன்னதமானதாகவும், நவீனமாகவும் தெரிகிறது என்று ஆப்பிள் நம்புவது குறிப்பிடத்தக்கது. 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.