Husqvarna Vitpilen 250 – ₹ 2.19 லட்சத்தில் 2024 ஹஸ்குவர்னா விட்பிளேன் 250 விற்பனைக்கு அறிமுகமானது

இந்திய சந்தையில்  2024 ஹஸ்குவர்னா விட்பிளேன் 250  மாடலில் கூடுதலாக பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்ட கஃபே ரேசர் ஸ்டைல் பைக்கின் விலை ரூ.2.19 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, புதிய 2024 ஹஸ்குவர்னா வரிசையில் ஸ்வார்ட்பிளேன் 401 விற்பனைக்கு ரூ.2.92 லட்சத்தில் வந்துள்ளது.

2024 Husqvarna Vitpilen 250

முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகளை பெற்றுள்ள கஃபே ரேசர் விட்பிளேன் 250 பைக்கில் 2024 மாடல் சற்று மாறுபட்ட வெளிபாடுகளை பெற்றுள்ளது. பக்கவாட்டில் புதிய பேனல்கள், முன்புற ஃபெண்டர், என்ஜின் பகுதியில் செம்பு வெண்கல நிறத்தை பெற்றுள்ளது.

Vitpilen 250 பைக் மாடலில் கேடிஎம் 250 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட 249.5cc லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் பெறப்பட்ட என்ஜின் அதிகபட்சமாக 30.47 bhp மற்றும் 25 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

புதிய 5 இன்ச் எல்சிடி, டிராக்‌ஷன் கட்டுப்பாடு, ரைடு பை வயர், க்விக் ஷிப்டர்+, சுவிட்சபிள் ஏபிஎஸ் மற்றும் சி-வகை சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.

புதிய ஸ்டீல் ட்ரெல்லிஸ் சேசிஸ் கொண்ட விட்பிளேன் 250 பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 25 மிமீ அதிகரித்து 177மிமீ ஆக உள்ளது. இருக்கை 820 மிமீ ஆகவும் பின்புற இருக்கை 877 மிமீ ஆக அமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்க் கொள்ளளவு 13.5-லிட்டராக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளின் கர்ப் எடை 163.8 கிலோகிராம் ஆகும்.

43mm WP USD ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் பெற்றுள்ள பைக்கின் முன்புறத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் உள்ளது.

2024 Husqvarna Svartpilen 401 ₹ 2,92,000

2024 Husqvarna Vitpilen 250   ₹ 2,19,000

(Exshowroom Delhi)

husqvarna vitpilen 250 cluster

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.