Kamal Haasan: 231 – இந்தியன் 2, 232 – விக்ரம்; அப்போ 236? கமலின் அடுத்தடுத்த படங்கள் ஒரு பார்வை!

‘விக்ரம்’ படத்திற்குப் பின் பிரபாஸின் ‘கல்கி 2898 ஏ.டி’ மற்றும் பிக் பாஸ் சீசன் 7 படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தினார் கமல். இடையே அ.வினோத், மணிரத்னம் இருவரின் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்தார். அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிலையில் கமலின் 237வது படத்தை இரட்டையர்களான அன்பறிவ் இயக்குகின்றனர் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் ஆச்சரியமூட்டும் கமலின் அடுத்தடுத்த படங்களின் நிலவரங்கள் குறித்த தகவல்கள் இனி…

சேனாதிபதி – இந்தியன் 2

கமலின் திரைப்பயணத்தில் ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு இயக்குநர்கள் அ.வினோத், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் முன்னோட்ட வீடியோக்களும் வெளிவந்தன. கமலின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ‘தக் லைஃப்’ அறிவிப்பும் வெளியானது. இது கமலின் 234வது படமாகும்.

தக் லைஃப்

ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்துவரும் ‘இந்தியன் 2’ கமலின் 231வது படமாகும். இந்தப் படத்தை ஏப்ரலுக்குக் கொண்டுவரத் திட்டமிடுகின்றனர். 232வது படம்தான் ஏற்கெனவே வெளியான ‘விக்ரம்.’ 233வது படத்தைத்தான் முதலில் அ.வினோத் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த லாஜிக்படி, 234வது படமாக ‘தக் லைஃப்’ உருவாகிவருகிறது. தொடர்ந்து பிரபாஸுடன் கமல் நடித்துவரும் ‘கல்கி 2898 ஏ.டி’ அவரின் 235வது படமாகும். இதற்கிடையே ‘இந்தியன் 3’வது பாகமும் ரெடியாகி வருவதால் அதுவே கமலின் 236வது படமாகக் கருதப்படுகிறது. இதற்கடுத்த படமே அன்பறிவ் இயக்கும் இந்தப் படமாகும்.

‘தக் லைஃப்’ மல்டி ஸ்டார் படம் என்பதால் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி எனப் பலரும் நடிக்கின்றனர். பிக் பாஸ் நிறைவடைந்துவிட்டதால் கமல் இப்போது ‘தக் லைஃப்’ படப்பிடிப்புக்கு வருகிறார். இது ‘நாயகன்’ படத்தின் தொடர்ச்சி என்றும், ‘பீரியட் பிலிம்’ அல்ல என்றும் சொல்லப்பட்டது. ஆனால், படக்குழுவினர் இரண்டையுமே இப்போது மறுத்து வருகின்றனர். கடந்த டிசம்பரிலேயே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி முதல் வாரத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கலாம் என்கிறார்கள்.

அன்பறிவ்வுடன் கமல்

இதற்கிடையே பிரபாஸுடன் நடித்த ‘கல்கி 2898 AD’ மற்றும் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. ‘தக் லைஃப்’பை முடித்துவிட்டு ‘தீரன் – அதிகாரம் ஒன்று’ இயக்குநர் அ.வினோத்தின் படத்திற்குக் கமல் வரலாமெனத் தெரிகிறது.

ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் கைவசம், இப்போது நிறைய படங்கள் இருக்கின்றன. ‘இந்தியன் 2’, ‘கல்கி 2898’, ‘தக் லைஃப்’, ‘வேட்டையன்’, ‘தலைவர் 171’, ‘கேம் சேஞ்சர்’ எனப் பல படங்களுக்கு அவர்கள் ஸ்டன்ட் அமைத்துவருகின்றனர். அவர்களது இந்த கமிட்மென்ட்கள் முடிந்த பிறகே, கமல் படத்தைத் தொடங்குவார்கள் என்கிறார்கள். அநேகமாக அக்டோபருக்குப் பிறகு ‘கமல் 237’ டேக் ஆஃப் ஆகலாம் என்கிறார்கள்.

இதில் எந்த கமல் படத்துக்கு நீங்கள் வெயிட்டிங் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.