‘பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே 21’ படத்திலும், தெலுங்கில் ‘தண்டல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இவரின் தங்கையான பூஜா கண்ணன் ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பூஜா கண்ணன் தன் காதலனை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். தற்போது அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “ இவர் தான் வினீத். என் க்ரைம் பார்ட்னர். இப்போது என் வாழ்க்கை பார்ட்னரும் கூட” என்று தனது காதலனை அறிமுப்படுத்தி புகைப்படங்களையும் வீடியோக்களைப் பகிர்ந்திருந்தார். பூஜாவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.