சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டியது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் 21 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தைத் தமிழக அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். வரும் 20 ஆம் தேதி இந்த சுடர் ஓட்டம் பெத்தநாயக்கன் பாளையத்துக்குச் சென்றடைகிறது. அதை சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டுச் சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளனர். […]
