An Arabic version of the Ramayana preserved at Gwalior | குவாலியரில் பாதுகாக்கப்பட்டு வரும் அரபு மொழி ராமாயண பிரதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

குவாலியர்: அரபு மொழியில் எழுதப்பட்ட ராமயாணம் பிரதி ஒன்று இன்றும் குவாலியர்அருகே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

latest tamil news

முகாலாய மன்னரான பாபர் அயோத்தியில் ராமர் கோயிலை இடித்து மசூதி கட்டினார் என்ற போதிலும் அவரது வழித் தோன்றலான அக்பர் அனைத்து மதத்தவரையும் அரவணைத்து சென்றுள்ளார். இந்து, முஸ்லீம் மற்றும் அனைத்து மதத்தினரையும்ஒன்றினைக்க தீன் இலாஹி நிறுவினார். இருப்பினும் அக்பரின் முயற்சி வெற்றிபெறவில்லை என கூறப்படுகிறது.

latest tamil news

இதனை தொடர்ந்து ராமரின் பாத்திரத்தை அரபு நாடுகளில் பரப்புவதற்காக அக்பர், ராமாயணத்தை அரபு மொழியில் எழுதினார். கையால் எழுதப்பட்ட இந்த ராமாயணம் பிரதி குவாலியரில் உள்ள கங்கதாஸ்ஜி கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. இன்றும் அதே பளபளப்பு தன்மையை கொண்டுள்ளது.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் அக்பர், தீன் இலாஹி மதத்தை உருவாக்குவதற்காக கங்காதாஸ்ஜி பள்ளியின் மஹந்த் பர்மானந்த்ஜி மகாராஜிடம் வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அக்பர் 12 கிராமங்களையும் தனது அரச தொப்பியையும் சந்த் பர்மானந்ஜிகக்கு குரு தட்சிணையாக வழங்கி உள்ளார்.இந்த தொப்பி இன்றும் கங்காதர்ஜிபள்ளியில் அமைந்துள்ள குரு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் அக்பர் வந்த காட்சி கோவிலில் சுவர் ஓவியமாக வரையப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.