சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சப்பட்ட வழக்கை கையில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கு தொடர்பாக, 680 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2023ம் ஆண்டு ஆண்டு அக்டோபர் மாதம் ஆளுநர் மாளிகை முன்பு கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டை வீசினான். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நீட்டுக்கு எதிராக பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் வெளியானது. […]
