திருவனந்தபுரம் :பள்ளி பாடப் புத்தகங்களில், ‘இந்தியா’ என்பதற்கு பதில், ‘பாரத்’ என்ற வார்த்தை இடம் பெற்று உள்ளதை மறுபரிசீலனை செய்யும்படி, கேரள அரசு விடுத்த கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்துஉள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பள்ளி பாடப் புத்தகங்களில், ‘இந்தியா’ என்பதற்கு பதில், ‘பாரத்’ என, மாற்ற பரிந்துரை செய்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், என்.சி.இ.ஆர்.டி.,யின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரியும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு, கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதிலளித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 1ல், ‘இந்தியா, அதுவே பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ இரண்டையும், நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர்களாக அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கிறது. இதை அடிப்படையாக வைத்து, இந்த இரு வார்த்தைகளையும் பயன்படுத்தலாம் என்பதை, என்.சி.இ.ஆர்.டி., ஏற்றுக் கொள்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே வேறுபாடு இல்லை.இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement