அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து நாடு முழுவதும் ராம பக்தர்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால் அயோத்தி செல்ல முடியாதவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே ராமரை வரவேற்க தயாராகியுள்ளனர். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் ரத ஊர்வலங்கள், பஜனைகள், நாம சங்கீர்த்தனம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரிய சமாஜம், சத்ய சாய் சமாஜம், ரமண சமாஜம் உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகள் […]