Special pujas in the name of Ram in Tamilnadu temples: Srivilliputhur Sadagopa Ramanujar Jeeer Swamis request | தமிழக கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள்:ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அயோத்தி:ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் தற்போது அயோத்தி சென்றுள்ளார். அங்கிருந்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட தமிழக அரசு உதவி செய்து, அனைத்து மக்களும் சமத்துவமாக உள்ளதை நிலைநாட்ட தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அயோத்தியே கல்யாண கோலாகலம் போல் உள்ளது. அயோத்யாவில் மக்கள் ஆடி பாடி கொண்டாடி வருகிறார்கள். அதேபோல், கர்நாடகா, ஆந்திரா கேரளாஉள்ளிட்ட அனைத்து தேசங்களிலிருந்தும் அயோத்திக்கு வந்துள்ளனர். 550 வருடங்களுக்கு பிறகு ராமர் கோவில் நமக்கு வந்துள்ளது. இது ராமருடைய செயல். நாளைய தினத்தில் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். ராமநாமஜெபத்தை சொல்ல வேண்டும். அனைத்து கோயில்களிலும் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.