சென்னை பிரதமர் மோடி மீண்டும் அடுத்த மாதம் தமிழகத்துக்கு வருவார் எனத் தமிழக பாஜக தெரிவித்துள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திற்கு இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அடுத்த மாதம் சென்னைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் […]
