போனா வராது… அதிரடி விலையில் ஐபோன் 15 ப்ரோ… அதுவும் ஐபோன் 14 ப்ரோவை விட கம்மி!

Apple 15 Pro vs Apple 14 Plus Price: ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல்தான் லேட்டஸ்ட் மற்றும் அப்டேட்டான ஐபோன் ஸ்மார்ட்போனாகும். இருப்பினும், ஐபோன் 15 ப்ரோ தற்போது, அதன் முந்தைய மாடலான ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மொபைலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது என்ற சொன்னால் நம்ப முடியுமா?.

பிளிப்கார்டில் தள்ளுபடி

ஆம், மேலே நீங்கள் வாசித்த அந்த தகவல் சரியானதுதான்.  ஐபோன் 14 பிளஸ் மொபைலை விட குறைந்த விலையில் ஐபோன் 15 ப்ரோ கிடைக்கிறது. அது வேறெங்கும் இல்லை. முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அதன் குடியரசு தின தள்ளுபடி விற்பனையில் இந்த சலுகை கிடைக்கிறது. 

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல் ஆப்பிள் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடலுடன் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை ஐபோன் 15 சீரிஸ் என பொதுவாக அழைக்கப்படுகின்றன. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ பல புதிய அம்சங்கள் மற்றும் பல மேம்படுத்தல்களுடன் சந்தைக்கு வந்தது.

தள்ளுபடிகள் எப்படி?

இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மொபைலின் விலை 1 லட்சத்து 27 ஆயிரத்து 990 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, பிளிப்கார்ட் உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக 57 ஆயிரத்து 990 ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது. அதாவது, அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோவை நீங்கள் 60 ஆயிரத்து 990 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் 70 ஆயிரம் ரூபாய் விலையில் பெறலாம். 

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ 70 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ அதன் முந்தைய மாடல்களில் இருந்து எல்லா வகையிலும் வித்தியாசமானதாக உள்ளது. புதிய ஐபோனின் விளிம்புகள் சற்று வளைந்திருப்பது, அதனை இறுக்கமாக பிடிப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. டைட்டானியத்தின் பயன்பாடு அதை கணிசமாக இலகுவாக்கியுள்ளது எனலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.