வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லாஸ்ஏஞ்சல்ஸ் : 2024 ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள்தான் பெருமைக்குரிய ஒரு விருதாக காலம் காலமாக கருதப்படுகிறது.
இதையடுத்து இந்தாண்டிற்கான 96வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த படமாக ‛‛அமெரிக்கன் பிக்சன்‛‛, ‛ஓப்பன்ஹைமர்’, ‛‛பார்பி”, ‛‛கில்லர்ஸ் ஆப்தி ஃபுளோர் மூன்” உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அதே போன்று சிறந்த நடிகர் பிராட்லி ஹூப்பர், கூல்மேன் டொமிங்கோ உள்ளிட்டோர் பெயரும், சிறந்த நடிகையாக ஆனட்டி,பென்னிங், லில்லி கிளாஸ்டோன், உள்ளிட்டோர் பெயர்களும், தவிர சிறந்த இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர், நடிகைகள் பெயர்களும், சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேசன் படங்கள் என 23 பிரிவுகளில் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement