சென்னை ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. எனவே ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாம்பாக்கத்தில் போதிய இட வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இன்று போக்குவரத்து […]
