சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இந்தியாவுக்கு காங்கிரஸால் சுதந்திரம் கிடைக்கவில்லை எனக் கூறி உள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நேற்று நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் 127-வது பிறந்தநாளையொட்டி, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், ”இந்தியச் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களுள் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் முதன்மையானவர். அவர் இன்றைய மாணவர்களுக்கு, சிறந்த முன்மாதிரியாக உள்ளார். இன்று நாம் சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகள், […]