Assam Rifles soldier in Manipur opens fire on colleagues before shooting self; 6 injured | அசாம் ரைபிள்ஸ் படை வீரர் துப்பாக்கிச்சூடு: சக வீரர்கள் 6 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இம்பால்: மணிப்பூரில், அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சக வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர். அந்த வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மணிப்பூர் மாநிலத்தில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தின் தெற்கு பகுதியில், இந்தியா மியான்மர் எல்லை பகுதி அருகே அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில், வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதில் 6 வீரர்கள் காயமடைந்து, சுரசந்த்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய வீரர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காயமடைந்த வீரர்கள் யாரும் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.