Tourist arrivals: Tamil Nadu tops in India | சுற்றுலா பயணிகள் வருகை: இந்தியளவில் தமிழகம் முதலிடம்

புதுடில்லி: இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் சென்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் மொத்த எண்ணிக்கை 67.8 கோடி பேர் அதே நேரத்தில் மாநிலங்கள் வாரியாக சென்றோரின் பட்டியலில்11.53 கோடி என்ற எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்தை 10.97 கோடி பயணிகளுடன் உ.பி., -ம் 8.14 கோடி பயணிகள் எண்ணிக்கையோடு கர்நாடகம் மூன்றாம் இடத்தையும் , நான்காவது இடத்தை 4.37 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா பிடித்துள்ளது. இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.