"இந்துக்கள் நமது நம்பிக்கையை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!" – ரேவதியின் வைரல் பதிவு

அயோத்தியில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 22ம் தேதி) ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரஜினி காந்த், தனுஷ், மாதுரி தீக்ஷித், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப், கங்கனா ரணாவத், விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நேரில் கலந்துகொள்ள முடியாத பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் சமூகவலைதளங்கள் மூலம் தங்களது ஆதரவையும், உணர்வுகளையும் ‘ஜெய் ஶ்ரீராம்’ எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வந்தனர்.

நடிகை ரேவதி

அவ்வகையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகை ரேவதி, “நேற்றைய நாள் (அயோத்தி ராமர் கோவில் விழா) வாழ்நாளில் மறக்க முடியாத நாள். பால ராமரின் முகத்தைப் பார்த்ததும் எனக்குள் அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இந்துவாகப் பிறந்த நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கைகளைக் காயப்படுத்தக் கூடாது என நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறோம். மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மிக நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்கிற நிலைதான் இருக்கிறது.

ஸ்ரீராமரின் வருகை பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இப்போது முதல் முறையாக நாம் ஶ்ரீ ராமரின் பக்தர்கள் என்பதை உரக்கச் சொல்கிறோம். ஜெய் ஶ்ரீராம்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவையும், விமர்சனங்களையும் தெரிவித்து ரேவதியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.