இனி ராம பக்தர்கள் என்று சத்தமாக சொல்வோம்: ரேவதி

சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. உலகையை திரும்பி பார்க்க வைத்த இந்த விழாவுக்கு பிறகு இந்துக்களிடையே ஆன்மிகம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை பலரும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து நடிகை ரேவதி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது ஒரு மறக்க முடியாத நாள். ராமரின் முகத்தை பார்த்ததும் என் உணர்வுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம்.

மதசார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மிக நம்பிக்கைகளை தனிப்பட்ட முறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்கிற நிலைதான் இருக்கிறது. ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என இனி சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம்” என ரேவதி பதிவிட்டுள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.