சம்பளமே தரமாட்றாங்க : கடுப்பாகி விலகிய ரவிகாந்த்

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் தொடரிலிருந்து அண்மையில் தான் ஹீரோ அக்னி விலகினார். அவர் விலகியதற்கு விபத்து தான் காரணம் என்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவிகாந்தும் சீரியலை விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரவிகாந்த் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக சொல்வது வதந்தி என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நீண்ட நாட்களாக எனக்கு சம்பள பாக்கி இருக்கிறது. இதுபற்றி பலமுறை கேட்டபோதும் இன்று நாளை கடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர சம்பளம் தரவில்லை. இந்த தொடரில் கதாநாயகன் கூட இந்த பிரச்னையினால் தான் வெளியேறினார்' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.