
பொன்னி சீரியலில் என்ட்ரி கொடுத்த வெற்றி வசந்த்
சிறகடிக்க ஆசை தொடரில் கலகலப்பான ஹீரோவாக முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெற்றி வசந்த். வெற்றி வசந்தின் தோற்றமும், எதார்த்தமான நடிப்பும் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அவருக்கு மேலும் ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி தொடரில் வெற்றி வசந்த், முத்து என்கிற கேரக்டரிலேயே நாயகியின் உறவினராக என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்த வீடியோவும் வைரலானது.