வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீன், கொரோனா தொற்று பாதிப்புடன் களமிறங்கினார். சமூக இடைவெளியை பின்பற்றி அவர் விளையாடுவதாக கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 ‘டி-20’ போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று (ஜன.,25) பகலிரவு போட்டியாக நடக்கிறது. இதற்கிடையே அந்த அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் கொரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் நெகடிவ் முடிவு வரவில்லை என்றாலும் அவர்களால் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று துவங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேமரூன் கிரீனும் அணியில் இடம்பிடித்தார். சமூக இடைவெளியை பின்பற்றி அவர் விளையாடுவதாக கூறப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் தேசிய கீதத்திற்காக நிற்கையில் அவர் மட்டும் இடைவெளி விட்டு தனியாக நின்றிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement