பெங்களூரு : ”ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை, இம்மாதம் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும்,” என, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணைய தலைவர் ஜெய பிரகாஷ் ஹெக்டே தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை, ஜனவரி 31க்குள் தாக்கல் செய்வோம். இடைக்கால அறிக்கை என்ற குழப்பங்களுக்கு இடமளிக்காமல், முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும். வரும் 31ல் என் தலைவர் பதவிக் காலம் முடிகிறது.
அறிக்கையில் உள்ள அம்சங்களை பகிரங்கப்படுத்த முடியாது. தற்போது அறிக்கை, புத்தகமாக அச்சிடும் பணி நடக்கிறது. அது தயாரான பின், முதல்வர் சித்தராமையாவிடம் நேரம் கேட்போம்.
அவர் நேரம் நிர்ணயித்த பின், அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதை ஜாதி வாரி கணக்கெடுப்பு என்றோ, காந்தராஜு அல்லது ஜெயபிரகாஷ் ஹெக்டே அறிக்கை என்றோ கருத வேண்டியதில்லை.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சமூக, கல்வி மற்றும் பொருளாதார ஆய்வாக இருக்கும். அரசிடம் அறிக்கை தாக்கல் செய்த பின், இது பற்றி அமைச்சரவையில் விவாதித்து, சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement