உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. இந்த டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நடக்கும் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணி திடீரென அதிருப்தியை தெரிவித்தது. ஏனென்றால், முதல் டெஸ்ட் போட்டிக்கு விண்ணப்பித்திருந்த இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த வீரர் சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைக்கவில்லை. இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது.
இதனால் அதிருப்தி அடைந்த இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இந்தியா அரசு விசா வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. சோயப் பஷீருக்கு விசா கிடைக்க வேண்டும் என்று நாங்கள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்துள்ளது. அவர் இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வருவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.