வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோனும், பிரதமர் மோடியும் வாகன பேரணி நடத்தினர்.
நாளை (ஜன.,26) நடக்கும் 75வது குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவரை பிரதமர் மோடி வரவேற்றார். புதுடில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடக்கும் குடியரசு தின விழாவில், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்நிலையில், ராஜஸ்தானின் வந்த மேக்ரோனை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து புகழ்பெற்ற ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர், ஹவா மஹால் உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட உள்ளார்.
பின்னர் ஜெய்ப்பூரில் முக்கிய சாலையில் பிரதமர் மோடியுடன் சாலைப் பேரணியில் அதிபர் மெக்ரோன் பங்கேற்றார். முன்னதாக ஜெய்ப்பூரில் கடை ஒன்றிற்கும் சென்ற மோடியும், மெக்ரோனும், அங்கு வைக்கப்பட்டிருந்த யு.பி.ஐ., டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான க்யூஆர். கோடு முறையை பிரதமர் மோடி மெக்ரோனுக்கு விளக்கினார். பின்னர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ராமர் கோயில் மாதிரி மர பொம்மையை மெக்ரோனிடம் காண்பித்தார் மோடி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement