Padma Awards 2024 Announcement: Coimbatores Padrapan gets Padma Shri Award | 2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு:கோவை பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது

புதுடில்லி: தமிழகத்தைச் சேர்ந்த வள்ளிகும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ உள்பட 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.

கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்து துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான/ சாதனைகள் / சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன், பத்ம விபூஷன், ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பார்.

கோவை மாவட்டம் தசாம்பாளையத்தைச்சேர்ந்த பத்ரப்பன், வள்ளி கும்மியாட்ட நடனத்தில் பெண்களுக்கு பயிற்சி அளித்து பங்கேற்க வைத்தவர். இந்திய வரலாறு குறித்து நடனம் மூலம் எடுத்துரைத்தவர்.

பத்மஸ்ரீ:

1) பத்ரப்பன் – வள்ளிகும்மியாட்ட நடன ஆசிரியர்.

2) பார்பதி பரூவா: இந்தியாவின் முதல் பெண் யானை பாகன்

3) ஜெகேஷ்வர் யாதவ்: பழங்குடியின நல சமூக சேவகர்.

4) சாமி முர்மு: சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு

5) குர்மீந்தர் சிங்: சமூக சேவை.

6) சத்யநாராயணனா பெலேரி : பாரம்பரிய நெல் விவசாயம்.

7) சங்கதன் ஹிமா : சமூக சேவை.

8) ஹேம்சந்த் மஞ்சி: பாரம்பரிய மருத்துவம்.

9) துஹ்குமஞ்சி: மேற்குவங்க பழங்குடியின மேம்பாடு.

10) கே. செல்லம்மாள்: தெற்கு அந்தமான்: ஆர்கானிக் விவசாயம்.

11) யனுங்க் ஜமோலிகோ: மூலிகை மருத்துவம்.

12) சோமன்னா : பழங்குடியினர் நல சமூக சேவை.

13) சர்பேஷ்வர் பசுமத்ரி : மலைவாழ் விவசாயம்.

14) பிரேமா தன்ராஜ்: சமூக சேவை, பிளாஸ்டிக் மறுசுழற்ச்சி.

15) உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே: சர்வதேச விளையாட்டு மல்லர் ஹம்.

16) யாஸ்தி மேனக்சா இட்டாலியா: மைக்ரோ பயாலாஜிஸ்ட் (நுண்ணறியவியல்)

17) ஷாந்தி தேவி பஸ்வான்: சமூக சேவகி.

18) ரத்தன் கஹர்: நாட்டுப்புற பாடகர்.

19) அசோக்குமார் பிஸ்வாஸ்: பெயிண்டர்.

20) பாலகிருஷ்ணன் சதானம்: புதிய வீட்டில் கல்லுவாளி கதக்ளி கலைஞர்.

21) உமா மகேஷ்வரி: முதல் பெண் ஹரிகதா விரிவுரையாளர்.

22) கோபிநாத் ஸ்வைன்: பாடகர் கிருஷ்ணலீலா

23) ஸ்மிருதி ரேகா சத்மா: திரிபுரா நெசவாளர்

24) ஓம்பிரகாஷ் சர்மா: பாரம்பரிய நடன கலைஞர். (மால்வா பிராந்தியம்)

25) நாராயணன்: கண்ணுர்: நாட்புற நடன கலைஞர்.

26) பகபத் பதன் : நிருத்தியா நடன கலைஞர்.

27) சனாதன் ருத்ரபால்: பாரம்பரிய சிற்பி.

28) ஜோடான் லெப்சா: மூங்கில் கைவினைஞர்.

29) மச்சிஹான் சாசா: மண்பாண்ட கலைஞர்.

30) காடம் சம்மையா: சிந்து நாடக கலைஞர்.

31) ஜான்கிலால்: பில்வாரா: பெஹூரூபியா கலைஞர்.

32) தாசரி கொண்டப்பா: வீணை கலைஞர்.

33) பாபுராம்யாதவ்: பித்தளை பொருள் கைவினை கலைஞர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.