Srilankas State Minister Sanath Nishantha dies in fatal accident | சாலை விபத்தில் சுக்கு நூறான கார்: இலங்கை அமைச்சர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கை நாட்டில் நடைபெற்ற கார் விபத்தில் அந்நாட்டின் இணை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்க நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி சனத் நிஷாந்த மற்றும் அவரது உதவியாளர்கள் சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதோடு மட்டுமல்லாமல் சாலையின் மீதிருந்த தடுப்புச் சுவரிலும் மோதியது. இதில் சுக்குநூறான காருக்குள் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட 3 பேரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். மேலும் அமைச்சருடன் விபத்தில் சிக்கிய அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடியும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.