Surge S32 EV : ஸ்கூட்டர், ஆட்டோ என இரண்டுக்கும் சர்ஜ் S32 எலக்ட்ரிக் அறிமுகமானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சர்ஜ் ஆட்டோமொபைல்ஸ் கீழ் S32 (Surge S32) எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல் ஸ்கூட்டர் அல்லது முன்று சக்கர ஆட்டோரிக்‌ஷா என இரு வகையில் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள மாடல் 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம்.

ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் எக்ஸ்ட்ரீம் 125R, மேவ்ரிக் 440, உட்பட ஃபிளக்ஸ் எரிபொருள் டூ வீலர், மற்றும் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.

Surge S32

ஹீரோ மோட்டோகார்ப் மூலம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வரும் சர்ஜ் S32 கான்செப்ட் ஆனது முழுமையாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட உள்ள தற்பொழுது காட்சிப்படுத்தியுள்ள எஸ்32 மாடலை வெறும் 3 நிமிடங்களில் ஸ்கூட்டரிலிருந்து மூன்று சக்கர ஆட்டோவாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த S32 அடிப்படையில் பயணிகளுக்கான S32 PV மூன்று சக்கர ஆட்டோ, வர்த்தகரீதியான பயன்பாடுக்கு ஏற்ற S32 LD, S32 HD மற்றும் S32 FB என மூன்று விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

surge s32

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக செயல்படும் பொழுது அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகம், 6 kW பவர் மற்றும் இதனுடைய பேட்டரி திறன் 3.87 kWh ஆகும். அதுவே மூன்று சக்கர ஆட்டோவாக மாற்றினால் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ, பவர் 10Kw மற்றும் பேட்டரி திறன் 11.616 kWh ஆக உயருகின்றது.

ஸ்கூட்டரிருந்து மூன்று சக்கர வாகனமாக மாற்றும் பொழுது அதிகப்படியான சிரமம் இல்லாமல் லாக்கிங் செய்வது மட்டுமல்லாமல் மிக பாதுகாப்பான முறையில் லாக் செய்வதனால் எவ்விதமான பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்ஜ் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஹீரோ மோட்டோகார்ப் 2 வீலர் மற்றும் 3 வீலர் என இரண்டு பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கி வரும் நிலையில், தற்பொழுது உற்பத்தி நிலையை எட்டியுள்ளது. சர்ஜ் எஸ்32 வாகனம் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

surge 32 cluster

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.