அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கை ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தென்னாபிரிக்காவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மறுத்துள்ள போதிலும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை அந்த இருநாடுகளுக்கும் பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது, பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டது, கிட்டத்தட்ட 2 மில்லியன் காசா மக்கள் இடம்பெயர்ந்தமை மற்றும் பாலஸ்தீனியப் பகுதிக்கு எதிராக இஸ்ரேல் அதிகாரிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஆகியவை […]
